குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியின் அருகே அமைந்துள்ளது திற்பரப்பு மகாதேவர் கோயில்.
இக்கோயில் கி.பி.857ல் ஆய்குல மன்னர்களில் ஒருவரான ஸ்ரீவல்லபா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கு பின் திருவாங்கூர் மன்னர்கள் அவரவர் காலத்தில் விரிவாக்கப்பணிகள் மேற்கொண்டதாகவும் திருவாங்கூர் தொல்பொருள் பதிப்புகளில் காணப்படுகிறது.
இக்கோயிலில் சிவபெருமான் மேற்கு நோக்கி ருத்ரபாவத்தில் அமைந்திருக்கிறார். மேற்கு நோக்கி சிவபெருமான் அமைந்திருப்பது அபூர்வமானதாகும். மூலஸ்தானத்திற்கு முன் உள்ள பூஜை மண்டபத்தின் இடதுபக்கம் நமஸ்கார மண்டபம் அமைந்துள்ளது.
இந்நிலையில், திற்பரப்பு அருள்மிகு மகாதேவர் கோயிலில், குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திற்பரப்பு மகாதேவர் கோயிலில் மரத்திலான கலைப் பணிகள் அதன் நிலையிலே செப்பனிட்டு பாரம்பரிய கலை வடிவங்கள் அப்படியே தொடரும்.
கோயிலில் அமைந்துள்ள பழுந்தடைந்த நமஸ்காரம் மண்டபம் பழமை மாறாமல் புணரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.
திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ஆன கட்டிட கலை, மற்றும் கலைநயம் செரிந்த கலை வடிவங்களை சிதையாமல் பாது காக்கா வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தி: த.இ.தாகூர், குமரி மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“