கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், டாஸ்மாக் மதுபானக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் மற்றொருவருடன் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, மே 7-8 தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்று டாஸ்மாக் கடைகள் விற்பனைக்கு தடைவிதித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் மே 16-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட மதுவிற்பனை நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருகிற மது பிரியர்கள் கூட்டம் அதிகம் கூடாமல் இருப்பதற்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் எஸ்.ஐ., 5 மணிக்கு மேல பிளாக்ல விற்கிறீங்க. மூடை மூடையாக சாரயத்தை ஏத்துறிங்க.. அதெல்லாம் எப்படி பண்றேன்னு பார்க்கிறேன் என்று கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், காவல்துறை உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
டாஸ்மாக் கடையின் முன்பு போலீஸ் எஸ்.ஐ. பேசிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Kanyakumari thuckalay police si speaking to another person before tasmac wine shop viral video
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!