scorecardresearch

கன்னியாகுமரி டு சென்னை: சி.எஸ்.கே விசில் போடு எக்ஸ்பிரஸ்; இலவச பயணத்திற்கு பதிவு செய்வது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் மேட்ச்சை, நேரில் பார்க்க வரும் 750 பேரை இலவசமாக சென்னை அழைத்து வர சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

csk

வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி, ஐ.பி.எல்.,இல் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

இந்த மேட்ச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதால், நேரில் பார்க்க வரும் 750 பேரை இலவசமாக சென்னை அழைத்து வர சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ஊர்களை கடந்து சென்னை வரை, 750 பயணிகளை இலவசமாக அழைத்து வர, ‘விசில் போடு எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்து வருபவர்களின் அனைத்து செலவையும், சி.எஸ்.கே- பஞ்சாப் போட்டிக்கான டிக்கெட் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.

விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய, ஏப்ரல் 14ஆம் தேதி(இன்று) முதல் www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

அதில் தேர்வு செய்யப்படும் 750 ரசிகர்கள் இந்த விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து, போட்டியை இலவசமாகவும் கண்டு மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kanyakumari to chennai whistle podu express csk announcement april 30th match