கன்னியாகுமரியில் ஒரே பாரதம் தீப ஒளி ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ.20) தொடங்கியது.
Advertisment
நாட்டின் 75ஆவது ஆண்டை சிறப்பித்து கொண்டாடும் வகையில் என்.சி.சி அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் இருந்து "ஒரே பாரதம், சிறந்த பாரதம் என்னும் சுடர் ஓட்டம் இன்று தொடங்கியது.
இந்த சுடர் ஓட்டம் டெல்லி சென்று நிறைவடைகிறது. அதாவது நாளொன்றுக்கு 50 கிலோ மீட்டர் என்ற முறையில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 60ஆம் நாளில் நிறைவு செய்கிறது.
இந்தத் தீப ஒளி ஓட்டம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா வழியாக, ஜனவரி திங்கள் 26ஆம் நாள் டெல்லி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்தத் தீபத்தை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொள்கிறார்.
குமரி செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil