scorecardresearch

கன்னியாகுமரியில் பயனற்று கிடக்கும் புதிய சொகுசு படகுகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடலில் பயணித்த சொகுசு படகுகளான தாமிரபரணி, திருவள்ளுவர் கரை திரும்பிய தினம் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் பூம்புகார் கப்பல் கழகத்தின் படகு துறையிலே நிற்கிறது.

Tamil news, latest news, latest tamil news, latest news in tamil Tamil nadu news, Madurai, Chennai, coimbatore, Tamilnadu news update, Trichy farmers protest, Kanyakumari, tourist Boat in Kanyakumari

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் கனவுகளில் ஒன்று. கடலில் படகில் பயணம் செய்து,கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், கடற்பாறை திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான்.

இயற்கை மாற்றங்களால் சில நாட்கள் படகு போக்குவரத்து தடை செய்யப்படும் நாளில் குமரி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தை அடைவர்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த ஆட்சியின் ஆயுள் முடிய இருந்த நேரத்தில், அன்றைய சுற்றுலா துறை அதிகாரிகள், அமைச்சர் அனுமதியில், கோவாவில் உள்ள தனியார் படகு கட்டும் நிறுவனத்தில் இந்த இரண்டு சொகுசு படகுகளும் உருவாக்கப்பட்டது.

இந்த படகுகள் கட்டுவதற்கு முன் கோவாவை சேர்ந்த நிறுவனம் கன்னியாகுமரிக்கு வந்து படகுதுறை, படகு பயணப்படும் கடல் நீர் பரப்பு பகுதியின் ஆழம், படகை கட்டி நிறுத்தும் படகுத்துறையின் தன்மை எதையும் ஆய்வு செய்யாது சொகுசு படகு கட்டமுடிக்கப்பட்டு கன்னியாகுமரி வந்த பின்தான் இந்த சர்ச்சை எழுந்தது.

குமரிக்கு கொண்டுவரப்பட்ட படகின் முதல் வெள்ளோட்டத்தின் போது, தமிழக அரசின் அன்றைய சிறப்பு டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், அன்றைய கன்னியாகுமரி சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் ஆஸ்டின், இரண்டு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என ரூ.8 கோடி செலவில் வாங்கப்பட்ட குளிர் சாதன வசதி கொண்ட சொகுசு படகுகளான தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற இரண்டு படகுகளும் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறை பகுதி கடல் பரப்பு பகுதிக்கு சென்று விட்டு கடலில் பல தூர கிலோமீட்டர் பயணப்பட்ட போது கடலில் கண்ட காட்சி நூற்றுக்கணக்கான கடல் பறவைகள் சிறகுகள் விரித்து படகிலிருந்து சற்று தூரத்தில் இருந்து படகின் பின்னே பயணித்தது. சொகுசு படகில் பயணித்த அனைவருக்கும் முதல் காட்சி அனுபவமாக இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடலில் பயணித்த சொகுசு படகுகளான தாமிரபரணி, திருவள்ளுவர் கரை திரும்பிய தினம் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் பூம்புகார் கப்பல் கழகத்தின் படகு துறையிலே நிற்கிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், சுற்றுலா துறையின் அமைச்சர் மதிவேந்தன் முதல் முறையாக கன்னியாகுமரியில், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, .ரூ.8 கோடி செலவில் கடந்த ஆட்சியாளர்களால் வாங்கி உள்ள இரண்டு படகுகளை எப்படி, எப்போது பயன்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

ஆட்சியர் அரவிந்த் மற்றும் சுற்றுலா துறையின் அதிகாரிகள், கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளர்கள் அமைப்பு பங்கு பெற்ற ஆலோசனை கூட்டம். கடந்த12-ம் தேதி நடைபெற்றதில் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் இரண்டு சொகுசு படகுகளை, கன்னியாகுமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் ஆலோசித்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது கடலில் சுற்றுலா பயணிகளின் படகு பயணத்திற்கு இரண்டு வகை கட்டணங்கள் உள்ளன. சாதாரண படகு பயணத்திற்கு ஒரு நபர் கட்டணம் ரூ‌.60.00, சிறப்பு கட்டணம் ரூ.200.00., இந்த நிலையில் சொகுசு படகில் கடல் நடுவே உள்ள இரண்டு இடங்களுடன் உள்ளன. வட்டக்கோட்டை முதல், கோவளம் மீனவ கிராமம் பகுதியில் உள்ள சூரிய அஸ்தமனம் காட்சி பார்க்கும் தூரம் வரை இரண்டு சொகுசு படகுகளை விரைவில் இயக்குவது என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. சுற்றுலா பயணிகளின் படகு கட்டணம் பற்றிய முடிவுக்குபின் இரண்டு சொகுசு படகுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நீண்ட நீல கடலில் அலைக்கூட்டங்களில் மிதந்து பயணிக்க உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kanyakumari tourist luxury boats for travel

Best of Express