Coimbatore, Madurai, Trichy News Highlights: கவின் கொலை வழக்கு - சுர்ஜித் சகோதரர் கைது

Coimbatore, Madurai, Trichy News Live- 13 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 13 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kavin surjith case

குமரி கடலில் நீர் மட்டம் தாழ்வு

கன்னியாகுமரி கடலில் நீர் மட்டம் தாழ்வு காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி கூண்டு பாலத்திற்கான சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

  • Aug 14, 2025 00:46 IST

    ரவுடி மண்ணச்சநல்லூர் குணாவிடம் சிபிசிஐடி டி.ஐ.ஜி. வருண் குமார் நேரில் விசாரணை

    அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு - புழல் சிறையில் உள்ள ரவுடி மண்ணச்சநல்லூர் குணாவிடம் சிபிசிஐடி டி.ஐ.ஜி. வருண் குமார் நேரில் விசாரணை



  • Aug 13, 2025 20:35 IST

    தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் துவக்கப்படும்: எடப்பாடி பழனிச்சாமி

    திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் 2026-ல் அதிமுக ஆட்சி அமைத்ததும் மீண்டும் துவக்கப்படும் என மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



  • Advertisment
  • Aug 13, 2025 20:34 IST

    சுர்ஜித், அவரது தந்தைக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்

    நெல்லை கவின் கொலை வழக்கு - சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனுக்கு 
    13 நாட்கள் நீதிமன்ற காவல் வழக்கி, வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட வன்கொடுமை  தடுப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது,



  • Aug 13, 2025 20:33 IST

    3வது நபர் ஜெயபாலனுக்கும் நீதிமன்ற காவல்

    கவின் கொலை வழக்கு - 3வது நபராக கைதான சுர்ஜித் சித்தி மகன் 
    ஜெயபாலனுக்கும் வரும் 26 வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு



  • Advertisment
    Advertisements
  • Aug 13, 2025 19:51 IST

    சொகுசு கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

    நாஞ்சிக்கோட்டையில் சொகுசு கார் மோதிய விபத்தில் 2 சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் மோதிய விபத்தில் சிறுமிகள் பவ்யஸ்ரீ (9), தேஜாஸ்ரீ(4) உள்பட 3 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.



  • Aug 13, 2025 18:50 IST

    அஜித் மரண வழக்கு -5 காவலர்களுக்கு காவல் நீட்டிப்பு

    திருப்புவனம் அஜித் மரண வழக்கில் 5 காவலர்களின் காவலை 3-வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள 5 தனிப்படை காவலர்களின் நீதிமன்ற காவலை மதுரை நீதிமன்றம் ஆக.26 வரை நீட்டித்தது. அஜித் மரண வழக்கில் காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் சிறையில் உள்ளனர்.



  • Aug 13, 2025 17:57 IST

    அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில் 

    ஆடிக் கிருத்திகையை ஒட்டி அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை முதல் ஆக.18ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 



  • Aug 13, 2025 17:11 IST

    கவின் கொலை வழக்கு - சுர்ஜித்த சகோதரர் கைது

    நெல்லை ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். புலன் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபால் கைது செய்யப்பட்டுள்ளார். 

     



  • Aug 13, 2025 15:50 IST

    நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

    மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அகற்றாத அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் மீண்டும் மீண்டும் சாலை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Aug 13, 2025 15:16 IST

    நச்சு வாயு தாக்கி இருவர் மயக்கம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியின் உள்ளே பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள், நச்சு வாயு தாக்கி மயங்கி விழுந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Aug 13, 2025 15:00 IST

    மணல் கடத்தல் காரை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

    நாமக்கல் அடுத்த மோகனூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட காரை தப்ப விட்ட சிறப்பு எஸ்.ஐ. சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அலட்சியமாக பதில் அளித்ததாக கூறி, மாவட்ட எஸ்.பி. விமலா அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • Aug 13, 2025 14:11 IST

    4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, திருவள்ளூர்  உட்பட 4 மாவட்டங்களில் இன்று  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Aug 13, 2025 14:07 IST

    "உள்நோக்கமில்லாமல் கையை பிடித்து இழுப்பது குற்றமாகாது"

    மனநலம் பாதிக்கப்பட்ட மகளின் கையை பிடித்து இழுத்ததாக தாயார் கொடுத்த புகாரில் முருகேசனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை அமர்வில் மனு தாக்கல், இளம் பெண்ணை தொந்தரவு செய்யும் வகையிலும், கையை இழுத்து பிடித்ததாக கூறப்பட்ட சம்பவத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லை, மூன்றாண்டு சிறை தண்டனை ரத்து செய்து பெண் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 



  • Aug 13, 2025 14:05 IST

    ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு

    நெல்லை மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுத்துள்ளார். ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்து துணைவேந்தரிடம் ஜீன் ஜோசப் என்ற மாணவி பட்டம் பெற்றார். தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார். 



  • Aug 13, 2025 12:35 IST

    காலை உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட மாணவர்கள் 8 பேர் கும்பகோணம் அரசு மருத்துமனையில் அனுமதி

    திருவாரூர் பூனாயிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் இன்று காலை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் ரவா கிச்சடி சாப்பிட்ட 8 மாணவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவுத் திட்ட உணவை மாணவர்கள் சாப்பிடும்போது அதில் பல்லி கிடந்தது தேரியவந்துள்ளது.



  • Aug 13, 2025 11:44 IST

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு நடித்து காட்டிய சுர்ஜித்

    நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கில், எப்படி கவினை கொலை செய்தேன் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு நடித்து காட்டிய சுர்ஜித்

    Video: Thanthi TV



  • Aug 13, 2025 09:45 IST

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

    கடலூர் மாவட்டம் வடலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஜெயராஜ் போக்சோவில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Aug 13, 2025 09:31 IST

    ஆக.15-ல் போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில் ரத்து

    வடகோவை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக போத்தனூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்திற்கு பதிலாக பகல் 12.50 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



  • Aug 13, 2025 09:29 IST

    திண்டிவனம் அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் உயிரிழந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து 45 ஆடுகள் உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Aug 13, 2025 09:20 IST

    பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது

    ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தூக்கு பாலத்தை உயர்த்தி மீண்டும் கீழே இறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.



  • Aug 13, 2025 09:20 IST

    மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் கைது

    மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை போலீஸ் கைது செய்தது. மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Aug 13, 2025 09:20 IST

    குமரி கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து

    கன்னியாகுமரி கடலில் நீர் மட்டம் தாழ்வு காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி கூண்டு பாலத்திற்கான சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



  • Aug 13, 2025 09:20 IST

    6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 13, 2025 09:20 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,040 கனஅடியாக குறைவு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,288 கன அடியில் இருந்து 15,040 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.02ஆக உள்ள நிலையில், பாசன வசதிக்காக 7,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

     



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: