காரைக்கால் கலெக்டர் மணிகண்டன் இன்று அதிகாலை தெருக்களில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்படுகிறதா என சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார்.
காரைக்கால் மக்களிடமிருந்து குப்பைகள் சாலைகளில் சரியாக சுத்தம் செய்யப்படுத்தப்படவில்லை என்றும், குப்பைகள் சரியான முறையில் வீடுகள் இருந்து வாங்கப்படவில்லை என்றும் பல்வேறு புகார்கள் வந்தன.
இதனையடுத்து திடீரென இன்று காலை காரைக்கால் ஆட்சியர் மணிகண்டன் அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று பல்வேறு வீதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஞானப்பிரகாசம் வீதி, மதகடி, சுண்ணாம்பு கார வீதி, டூப்லெக்ஸ் வீதி, பாரதி நகர், கடற்கரை சாலை சுபாஷ் சந்திர போஸ் சாலை, பள்ளிவாசல், திருநள்ளாறு ரோடு மற்றும் அம்பேத்கர் வீதி மற்றும் பல்வேறு வீதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி இருந்ததை கண்ட ஆட்சியர் தனது செல்போனில் படம் எடுத்து கொண்டார்.பின்பு சம்பந்தப்பட்ட சூப்பர்வைசரை அணுகி அப்புறப்படுத்த உத்தரவிட்டார்கள்.
சில இடங்களில் சைடு வாய்க்காலில் நீர் தேங்கி இருந்ததை கண்டதும் அதனை அப்புறப்படுத்த தூய்மைப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“