சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 100 அடி சாலையில் தனியார் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பேக்கரியில் காதலர் தினத்தினை முன்னிட்டு காதலர்களுக்கு ரோசாப்பூ வழங்கும் சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவியது.
/indian-express-tamil/media/post_attachments/d900e1e7-2ed.jpg)
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் சிலர் தாலிக்கயிறுடன் அந்த பேக்கரி முன் எதிர்ப்பு தெரிவிக்க வந்தநனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/bd95c3df-295.jpg)
இந்தத் தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேக்கரி நிர்வாகம் ஆஃபர்களை ரத்து செய்ததாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அமைதி நிலவியது. மேலும், அறிவிப்பு பலகையும் உடனடியாக அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
/indian-express-tamil/media/post_attachments/337b9508-c4e.jpg)