scorecardresearch

அதிரடி டான்ஸ்; யூ டியூப் ஒளிபரப்பு.. கரகக் கலையை சீர்குலைத்தாரா மதுரை பரமேஸ்வரி?

பிரபல கரகாட்ட கலைஞர்பரமேஸ்வரி சக கலைஞர்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

Karakata artist Parameshwari lodged a complaint at Madurai Police Station
கரகாட்ட கலைஞர் மதுரை பரமேஸ்வரி

மதுரை திருமங்கலம் பாண்டியநகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி. கரகாட்ட கலைஞரான இவருக்கு பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையில் பட்டாம்பூச்சி என்ற வலையொளி சேனல் தொடங்கி, அதில் தனது ஆட்டத்தையும் அவர் பதிவேற்றிவருகிறார்.
இவர் மீது சமீபத்தில் சக கரகாட்ட கலைஞர்கள் சிலர் புகார் அளித்தனர். அதில் பரமேஸ்வரி கரகாட்ட கலையை அழித்து வருகிறார். திருவிழா நிகழ்ச்சிகளில் சாதி கொடி அணிந்து நடனமாடுகிறார்.

இவரால் மற்ற கலைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர்” எனப் புகார் அளித்தனர். இந்தப் புகாருக்கு பதிலளித்துள்ள பரமேஸ்வரி, “தன்னை சக கலைஞர்கள் தாக்கி வருவதாகவும், தமது வளர்ச்சி அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கரகாட்டத்தை அழிக்க வந்தவள் நான் என்றும் கூறுகின்றனர்.
இதில் உண்மை இல்லை” எனத் தெரிவித்துள்ளார். மேலும், என் உயிரை எடுப்பேன் எனவும் சிலர் கூறுகின்றனர். தொடர்ந்து என் தனிப்பட்ட வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர் என கூறும் பரமேஸ்வரி மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகாரும் அளித்துள்ளார்.

கரகாட்ட கலைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதல், போட்டியா அல்லது பொறாமையா? என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பிவருகின்றனர். மேலும், கரகாட்ட கலையை சீர்குலைத்தாரா பரமேஸ்வரி என்ற டாக்கும் எழுந்துவருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Karakata artist parameshwari lodged a complaint at madurai police station