/tamil-ie/media/media_files/uploads/2019/06/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-16.jpg)
Tamil Nadu news today
karate thiagarajan suspend : காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜனை இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் கராத்தே தியாகராஜன்.இவர் சமீபத்தில் திருநாவுக்கரசர் திருச்சியில் தனது சொந்த செல்வாக்கால் வென்றார் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்தும் பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கு விளக்கமளித்திருந்த கராத்தே தியாகராஜன் திமுக கூட்டணி குறித்து தான் பேசியது சொந்த கருத்தும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது.
@INCIndia suspends South Chennai district secretary Karathe Thiagarajan for frequent anti party activities, He recently said that #Congress should break ties with @arivalayam & contest alone in local body polls after which #dmk KN Nehru retaliated on the same lines! pic.twitter.com/j0AiJtJLmB
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) 27 June 2019
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழக காங்கிரஸ் கட்சியில், தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார். அவர் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.