காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!

திமுக கூட்டணி குறித்து தான் பேசியது சொந்த கருத்து

Tamil Nadu news today
Tamil Nadu news today

karate thiagarajan suspend : காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜனை இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் கராத்தே தியாகராஜன்.இவர் சமீபத்தில் திருநாவுக்கரசர் திருச்சியில் தனது சொந்த செல்வாக்கால் வென்றார் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்தும் பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு விளக்கமளித்திருந்த கராத்தே தியாகராஜன் திமுக கூட்டணி குறித்து தான் பேசியது சொந்த கருத்தும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக காங்கிரஸ் கட்சியில், தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார். அவர் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Karate thiagarajan suspends from congress party

Next Story
சென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலிchennai, chennai fire accident, fridge blast, media reporter, dead, school teacher, சென்னை, சென்னை தீவிபத்து, பிரிட்ஜ் வெடித்து விபத்து, தொலைக்காட்சி ஊழியர், பள்ளி ஆசிரியை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com