சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் பாஜகவில் இணைகிறார்

Karate Thiyagarajan to join BJP தன்னுடைய ஆதரவாளர்களுடன் தெற்கு சென்னையில் மிகப் பெரிய அரசியல் கூட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறார்.

By: Updated: February 10, 2021, 06:36:31 PM

Karate Thiyagarajan to join BJP Tamil News : புகழ்பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் பாரதீய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நபர்களில் ஒருவராக இருக்கிறார். ஆதாரங்களின்படி, வியாழக்கிழமை கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்குமார் கணேசன் 60-களில் காங்கிரஸுக்கு தனது ஆதரவை வழங்குவதற்கு முன்பு, திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரஜினியின் கட்சி தொடங்கும் திட்டம் கைவிடப்பட்டதால் பல முன்னணி தலைவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அந்த வரிசையில் முன்னாள் துணை மேயரும் ரஜினிகாந்த்தின் ஆதரவாளருமான கராத்தே ஆர் தியாகராஜன் வருகிற வியாழக்கிழமை பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் மாநிலக் கட்சித் தலைவர் எல் முருகனைச் சந்தித்த தியாகராஜன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் தெற்கு சென்னையில் மிகப் பெரிய அரசியல் கூட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறார்.

இதற்கிடையில், பிரதமரின் காவிரி-குண்ட்டர் நதிகள் இணைக்கும் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் செயல்பாட்டிற்கும் மாநில அரசு தயாராகி வருகிறது. எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சி செயல்பாடுகள் குறித்து விவாதிக்கத் தமிழக பாஜக தலைவர்களை சந்திக்கவுள்ள கட்சி கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என்று கமலாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Karate thiyagarajan to join bjp tamilnadu politics tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X