scorecardresearch

கர்நாடக தேர்தல்: பா.ஜ.க-வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்திய அ.தி.மு.க

கார்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இபிஎஸ்

கார்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வருகின்ற மே 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் பாஜகவிற்கும் காங்கிரஸ்-க்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் அதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாக, அதிமுக அறிவித்தது. கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்தார். கர்நாடக மாநில அதிமுகவின் அவைத்தலைவரக அன்பரசன் பொறுப்பில் இருக்கிறார். இந்த தொகுதியில் அதிகம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

பாஜகவிலிருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தது முதல் பாஜக-வுக்கும் அதிமுகவிற்கும் மோதல் போக்கு நிலவுகிறது என்பது குறிப்பிடதக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Karnata election 2023 admk candidate announced by edappadi palanisamy

Best of Express