Advertisment

கர்நாடக சட்டசபை தேர்தல் : வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றது அதிமுக

கர்நாடக மாநிலம் புலிகேசிநகர் தொகுதி அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News

Tamil News Updates

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுகவும் வேட்பு மனு தாக்கல் செய்தது. கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக நடந்துக்கொண்டதாக பாஜகவினர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிந்தனர்.

Advertisment

இந்நிலையில்,பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கர்நாடக மாநிலம் புலிகேசிநகர் தொகுதி அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (ஏப்.24), பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர் D.அன்பரசனை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான D.அன்பரசன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் மே 10-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஆலோசனை நடத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெங்களூருவில் உள்ள புலிகேசிநகர் தனி தொகுதியில் அதிமுக சார்பில் அவைத் தலைவர் அன்பரசன் வேட்பாளராக அறிவித்திருந்தும், ஓபிஎஸ் அணியினரும் கர்நாடகாவில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்ததும், தற்போது 2 தரப்பினருமே தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment