Advertisment

கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விட்டதா? காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விட்டதா என்பது குறித்து விரிவான பதிலை பிரமாணப் பத்திரமாக செப். 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

author-image
WebDesk
New Update
cauvery

Karnataka Cauvery Water Issue

தமிழ்நாட்டுக்கு,கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விட்டதா என்பது குறித்து விரிவான பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக மாநில அரசு தர மறுத்து வருகிறது. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா செயல்படுத்தவில்லை.

இதையடுத்து உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதில், ‘ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு' வலியுறுத்தியது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது காவிரி நதி நீர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் எனத் லைமை நீதிபதி தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், காவிரி வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால், தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகிவிடும். தண்ணீர் திறப்பு விவகாரத்தில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற மறுக்கின்றது. எனவே, கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும், என வாதிடப்பட்டது.

அப்போது கர்நாடக அரசுத் தரப்பில், கர்நாடகத்தைப் பொறுத்தவரை, இது வறட்சியான ஆண்டாக இருக்கிறது. அதேநேரம் போதிய மழை இல்லாததால், அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கிறது. இந்த சூழலில், எங்களால் எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும்.

இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது, என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விட்டதா என்பது குறித்து விரிவான பதிலை பிரமாணப் பத்திரமாக செப். 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து தமிழக அரசின் மனு மீதான விசாரணை செப்.1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment