கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரிதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா மற்றும் அமைச்சரவை இன்று பதவியேற்றது, அவரது பதவியேற்பு விழாவுக்கு அனைத்து மாநில முதலமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வந்திருந்தது. அவர் விழாவில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 2008 இல் ரங்கசாமி புதிய கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார்.
காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் நீண்டகாலம் பணியாற்றியவர்.
நட்பு அடிப்படையில் விழாவில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. அதே நேரத்தில் பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவோடுதான் ரங்கசாமி புதுவையில் ஆட்சி நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு சென்றால், புதுவை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்பு நிலவியது. ஆனால் முதல அமைச்சர் ரங்கசாமி இன்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு செல்லவில்லை.
இன்று சனிக்கிழமை என்பதால் அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில் வழக்கம்போல பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“