/tamil-ie/media/media_files/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-13-at-1.48.41-PM.jpeg)
Karnataka Election Results 2023
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர், அதேபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் காங்கிரஸ் வெற்றி கொண்டாடப்பட்டது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஒன்று கூடினர், அங்கிருந்து மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணிய தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-13-at-1.48.41-PM-1.jpeg)
அண்ணா சாலை காமராஜர் சாலை சந்திப்பில் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் தேர்தல் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ ஆனந்தராமன் சீனியர் துணை தலைவர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, பொதுசெயலாளர் தனுசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.