Advertisment

'தமிழ்நாடு கோரிய தண்ணீரை தர முடியாது': கர்நாடகா அரசு திட்டவட்டம்

தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்றும் கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Karnataka govt authorities on cauvery water dispute at Delhi meeting Tamil News

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Cauvery Management Board: தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

இக்கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீரையும் தடை இன்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சினை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்றும் கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment