திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சாமி திருக்கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா,சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, ’4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளேன். எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், இந்திய மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன், என்றார்.
மேலும் தமிழ்நாட்டிற்கு உபரி நீர் தான் வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த தேவகவுடா, ‘காவிரி பிரச்சனை குறித்து தமிழ்நாட்டில் உள்ள முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களுக்கு முழுமையான விவரங்கள் தெரியும்.
பெங்களூரில் மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சரியான குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருவது அனைவரும் அறிந்த செய்தி தான். தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளுக்கும் இது தெரியும். இது குறித்து இதற்கு மேல் நான் கருத்து கூற விரும்பவில்லை. கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
காவிரி பிரச்சனை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நாள் விரைவில் வரும், அன்று அந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என உறுதிபட தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“