கர்நாடகாவின் நந்தினி பால் தமிழ்நாட்டில் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுடன் இணைந்து தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனையைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனத்தைப் போல கர்நாடகாவில், நந்தினி பால் நிறுவனம் உள்ளது. இது கர்நாடாகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம் (கே.எம்.எஃப்), பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
தமிழகத்தில் பால் விற்பனை செய்யும் ஆவின் நிர்வாகம் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டாலும், ஆவின் மிகப் பெரிய கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், கர்நாடகாவின் நந்தினி பால் உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சில தனிமனிதர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவின் நந்தினி பால் தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனையைத் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அண்மையில், கர்நாடாகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம் (கே.எம்.ஃப்) தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் பால் பாக்கெட் செய்வது மற்றும் பால் சந்தைப்படுத்துதலில் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 20-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தது.
தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆவினுக்கு பால்கொள்முதல் செய்வது குறைந்துள்ள நிலையில், கர்நாடகாவின் நந்தினி பால் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்காக தமிழ்நாட்டில் நுழைகிறது.
காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவில், கர்நாடகாவில் மழை பொழிவு குறைவு என்று கூறி தமிழ்நாட்டுக்கு கர்நாடகா காவிரி நதி நீரை திறந்துவிட மறுத்து வந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து, கர்நாடாக 5 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்திலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான், கர்நாடகாவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம் தனது நந்தினி பால் மற்றும் பால் பொருட்களை உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சில தனிமனிதர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவின் நந்தினி பால் தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனையைத் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.