காங்கிரஸ் மக்களவை எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ரபேல் வாட்ச் விவகாரம் ஒரு சர்ச்சையை அல்ல. நான் கூட விலை உயர்ந்த வாட்ச் கட்டியுள்ளேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கமல்ஹாசன் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ரபேல் வாட்ச் விவகாரம் ஒரு சர்ச்சை அல்ல.
நாட்டில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்படுகிறது. பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகவே நாம் புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமா? படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, கல்வி மேம்படுத்தப்படுமா? இதைப் பற்றிதான் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
ஆகவே, ஒரு அரசியல் தலைவர் என்ன வாட்ச் கட்டியுள்ளார் என்பது சர்ச்சையை இல்லை. கமல்ஹாசன் எங்கள் கூட்டணியில் இணைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதை நான் ஏற்கனவே கூறியிருந்தேன்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/