ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!

கார்த்தி ப.சிதம்பரம், சென்னை விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் இன்று மாலை டெல்லி நீதிமன்ற்ஃபத்தில் ஆஜரப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது , அவரின் மகன் கார்த்தி சிதம்பரம், அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தனது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி, கார்த்தி சிதம்பரம்  அந்நிறுவனத்தை தனது கட்டுபாட்டில் இயக்கி வந்தாகவும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து கார்த்திக்கு பெருமளவில் பணம் தரப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வந்தது.

பின்பு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த விவகாராம் தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி  கார்த்தி சிதம்பரத்தின்   ஆடிட்டர் பாஸ்கர ராமன்  கைது செய்யப்பட்டார்.அவரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில்  சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தனர்.  விசாரணைக்காக கார்த்தி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. மேலும், டெல்லி நீதிமன்றத்தில் இன்று மாலை 4 மணிக்கு கார்த்தி ஆஜரப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

கார்த்தி இன்று காலை லண்டனில் இருந்து  புறப்பட்டு  சென்னை வருகிறார் என்ற தகவலை தெரிந்துக் கொண்ட டெல்லி சிபிஐ துறையினர் அவரை, சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரின் ஆடிட்டர்  பாஸ்கர ராமன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் கார்த்தியை கைது செய்துள்ளதாகவும், சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் கேட்டு கார்த்தி ஏற்கனவே,  உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கார்த்தி இன்று(28.2.18) டெல்லி சிபிஐயினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

×Close
×Close