Advertisment

கார்த்திகை மாதம்: கோவை சாரதாம்பாள் கோயிலில் 10,000 விளக்குகள் ஏற்றி வழிபாடு

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கோவை பந்தயசாலை பகுதியிலுள்ள சாரதாம்பாள் கோயிலில் பக்தர்கள் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.

author-image
WebDesk
Nov 21, 2022 15:52 IST
கார்த்திகை மாதம்: கோவை சாரதாம்பாள் கோயிலில் 10,000 விளக்குகள் ஏற்றி வழிபாடு

கோவை பந்தயசாலை பகுதியில் பிரசித்திபெற்ற சாரதாம்பாள் கோயில் உள்ளது. இங்கு இன்று (நவம்பர் 21) கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர். கார்த்திகை மாதம் இருளை விலக்கி ஒளியை கொடுக்கும் மாதமாக வழிபடப்படுகிறது.

Advertisment

கார்த்திகை முழுவதும் கோயில்களில் விளக்கேற்றி சிறப்பு பூஜை செய்யப்படும். வீடுகளிலும் மக்கள் விளக்கேற்றுவர். திருகார்த்திகை தீபத்தன்று மக்கள் வீடுகளில் பூஜை செய்து, விளக்கேற்வர். இந்நிலையில் இன்று கோவை பந்தயசாலையில் உள்ள சாரதாம்பாள் கோயில் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை செய்யபட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோயிலில் விளக்கு ஏற்றினர்.

publive-image

நட்சத்திரம், சுவஸ்திக் போன்ற வடிவங்களில் அகல் விளக்குகள் அடுக்கி வைக்கபட்டு ஏற்றப்பட்டது. பெற்றோர் குழந்தைகளின் கைகளை பிடித்து விளக்கேற்றினர். கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்ற வேண்டுமென்பது ஐதீகம், ஆனால் வீடுகளில் மாதம் முழுவதும் விளக்கேற்றி வைக்க முடியாததால் கோயிலில் இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு, விளக்கேற்றப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

publive-image

இனி வருகின்ற மாதம் கடுங்குளிர் என்பதால் கடுங்குளிரில் இருந்து மக்களை இந்த தீப ஒளி காக்கும் எனவும், கார்த்திகை மாதத்தில் அகல் விளக்கேற்றி வழிபடுவதில் கிடைக்கும் ஒளியைப் போல

அனைவரது வாழ்விலும் ஆயுள், கல்வி, தொழில், வளர்ச்சி என அனைத்தும் ஒளிமயமானதாக அமைய பிரார்த்தனை செய்ததாகவும் பக்தர்கள் கூறினர். கோயிலில் தீபம் ஏற்றி வழிபடுவது மனமகிழ்ச்சி அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

publive-image

செய்தி:பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment