New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/08/karthik-sidhambaram-2025-07-08-16-07-43.jpg)
ரயில்வேயில் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்காமல் புல்லட் ரயில் விடுவதால் பலனில்லை என கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மடப்புரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் இல்லத்திற்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் நேரில் சென்று, அவரது தாய் மாலதியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அஜித் குமாருக்கு நடந்தது கொடூரமான கொலை. இதற்குக் காரணம் காவல்துறையின் கலாச்சாரம் என குற்றம் சாட்டியவர். ஆங்கிலேயர் காலத்து அடக்கு முறையை காவல்துறையினர் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இதனை மாற்ற காவல்துறைக்கு புதிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
ஆனால் காவல்துறையினர் பழைய முறையை பின்பற்றினால் பினிக்ஸ் ஜெயக்குமார், விக்னேஷ், அஜித்குமார் என தொடர்ந்து கொண்டே போகும் என எச்சரித்தவர், அஜித் குமார் கொலை வழக்கினை சிபிஐ விசாரணை மேற்கொள்வது தான் சரி என்றார்.
மேலும் பாஜக அதிமுக கூட்டணி நீடித்தாலும் நீடிக்காவிட்டாலும் அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை. என்றவர், எடப்பாடி பழனிச்சாமி பேரணியில் அவருடன் இருப்பவர்கள் சரியான நபர்கள் இல்லை. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி போகப்போக ஏற்றுக் கொள்வார் என்ன நம்பிக்கை தெரிவித்தார். கடலூர் ரயில்வே விபத்து குறித்த கேள்விக்கு, ரயில்வேயில் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்காமல் புல்லட் ரயில் விடுவதால் பலனில்லை. ஒன்றிய அரசு தங்களது பெருமையை பேசுவதற்காக புல்லட் ரயிலை விட்டுள்ளனர்.
னால் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில், ரயில்வே பாதுகாப்பிற்கு முன்னுரிமையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த காவல்துறை கொலை சம்பவத்திற்கும் தமிழக அரசிற்கும் தொடர்பில்லை. அதுபோல் எடப்பாடி பழனிச்சாமி அரசால் தான் சாத்தான்குளம் சம்பவம் நடைபெற்றது என்று நான் கூற மாட்டேன். இவை அனைத்தும் போலீசின் கலாச்சாரத்தால் ஏற்பட்டது அவர்கள் இன்னும் பழைய நிலையிலேயே உள்ளனர் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.