திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சியின் முதல் தலைமை நிர்வாக பகுதியாக பத்மநாபபுரம் இருந்தது. அதன் சுற்று வட்டாரப் பகுதியின் பெயர் வேணாடு ஆகும். இந்நிலையில், மன்னராட்சி போய் மக்களாட்சி வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில் புனித சவேரியாரின் வருகையால் மீனவ மக்கள் மத்தியில் கிறிஸ்துவை பற்றிய புரிதல் ஏற்பட்டு அவர்கள் கிறிஸ்தவத்தை தழுவினார்கள்.
Advertisment
இதற்கிடையில், குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியில் புனித சவேரியார் தங்கியிருந்த காலத்தில் இறைவனை வழி பட ஆலயம் கட்ட தனக்கு ஒரு இடம் வேண்டும் என சவேரியார், அன்றைய திருவிதாங்கூர் மன்னரிடம் கோரிக்கை வைத்தார். அப்போது, திருவிதாங்கூர் மன்னரும் சவேரியார் தங்கியிருந்த கோட்டார் பகுதியிலே நிலம் கொடுத்தார். புனித சவேரியார் அவரது கையாலே கட்டிய சிறிய மாதா "குருசடி". இன்றும் கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை தேவாலயமாக விளங்குகிறது.
திருத்துவபுரம் கிறித்தவ தேவாலயத்தின் முற்றத்தில் கார்த்திகை எண்ணெய் தீபம்
இது, புனித சவேரியார் பேராலயத்தின் ஒரு பகுதியாக இன்றும் உள்ளது. இந்தத் தேவாலயத்தின் திருவிழா காலத்தில் 9ஆம் நாள் இரவு நடக்கும் தேரோட்டத்தின் போது மத பேதம் இல்லாது தரையில் உருண்டு செய்யும் கும்பிடு நமஸ்காரம் காலங் காலமாக இன்றளவும் தொடர்கிறது. அதேபோல், குமரி மாவட்டத்தில் பல தேவாலயங்களில் கார்த்திகை விளக்கு ஏற்றுவது ஒற்றுமையின் அடையாளமாக நடக்கும்.
Advertisment
Advertisements
இந்த நிலையில், திருத்துவபுரம் என்னும் பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயத்தின் முற்றத்தில் கார்த்திகை எண்ணெய் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், இயேசு கிறிஸ்து பிறப்பு விழாவை வரவேற்கும் வகையில் தேவாலயத்தை மின்சார விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தின் 10 நாள்கள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நிறைவடையும் என்பது நினைவு கூரத்தக்கது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil