ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை - ஐஜி கார்த்திகேயன்

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Trichy news, Karthikeyan IPS, Tamil Nadu news, central zone IG Karthikeyan, திருச்சி, மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், தமிழ்நாடு

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பா, திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக கடத்த ஒன்றரை ஆண்டுகளாகவும் அதற்கு முன்பு திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையராகவும், கோவை சரக காவல்துறை துணைத்தலைவராகவும், 2016-ம் ஆண்டில் பணியாற்றிய அவர் மத்திய மண்டல ஐஜியாக ஜனாரி 4-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisment

மத்திய மண்டல ஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் தமிழக முதல்வரின் ஆணைக்கேற்ப போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட 2023-ம் ஆண்டில் அதிக முக்கியத்துவம் தரப்படும். கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்குதல் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கியுள்ளேன். பொதுமக்கள், காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

Advertisment
Advertisements

மணல் கடத்தல், சட்டவிரோதமாக சாராய விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இணைய மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளேன்.

சட்ட விரோத மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு குண்டர், தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன்.

சாலை விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் அனிக்க விரும்பும் பொதுமக்கள் வேலை நாட்களில் தினமும் பிற்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம்” என்று தெரிவித்தார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchi District Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: