New Update
00:00
/ 00:00
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப. சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்திமையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது. ஆனால், அந்த பணிகள் முடியாமல் காலதாமதமானதால் சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களின் விசா முடிவடைந்தது.
இதனால், 263 ஊழியர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தருமாறு அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரராமன் என்பவருக்கும் ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுத்தாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கு
இது தொடர்பாக ப.சிதம்பரம் மீது கடந்த 2022 மே மாதத்தில் வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் வீட்டில் கடந்தாண்டு சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், பாஸ்கரராமனை கைது செய்தனர். சி.பி.ஐ புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு பதிவு செய்து சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது.
கடந்த நவம்பர் மாதம் 12 மற்றும் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி அவர் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். இதையடுத்து கடந்த ஜனவரி 2-ம் தேதி மீண்டும் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
ஜாமீன்
இந்த நிலையில், விசா முறைகேடு வழக்கு விசாரணைக்காக, கார்த்தி சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவருக்கு இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கி, டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.