Advertisment

தமிழகத்தில் ஒரே நாளில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று

தேசிய அளவில் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
karti chidambaram, karti chidambaram mp, karti chidambaram tested covid-19 positive, கார்த்தி சிதம்பரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி, கார்த்தி சிதம்பரம் எம்பி, சிவகங்கை, ப சிதம்பரம், karti chidambaram tested coronavirus positive, ஒரத்தநாடு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று, மயிலாடுதுறை திமுக எம்பி திருவிடை மருதூர் செ ராமலிங்கம், karti chidambaram sivagangai mp, orathanadu mla ramachandra tested covid-19 positive, mayiladuthurai mp thiruvidaimarudhur s ramalingam tested covid-19 positive, karti chidambaram congress mp, karti chidambaram congress, p chidambaram, karti chidambaram home quarantine

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்றுக்கு சமீபகாலமாக முன்களப்பணியார்கள், மக்கள் பிரதிநிதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய அளவில் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

Advertisment

சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகளில் பல அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களான காவலர்கள் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில், மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் அமைச்சர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே போல, தமிழகத்தில் நேற்று நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சிவகங்கை தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இது குறித்து கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “எனக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. மருத்துவ அறிவுரையின் பேரில் நான் வீட்டு குவாரண்டைனில் உள்ளேன். அதனால், சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் மருத்துவ நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கார்த்தி சிதம்பரம் MP கரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார். நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி” என்று டுவீட் செய்துள்ளார்.

அதே போல, இன்று மயிலாடுதுறை திமுக எம்.பி திருவிடைமருதூர் செ.ராமலிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரத்தநாடு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 எம்.பி.க்களுக்கும் 1 எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Dmk All India Congress P Chidambaram Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment