Advertisment

'கட்சி அறிவிப்பது முக்கியம் கிடையாது; விஜய் பட்டு தெரிந்து கொள்வார்': காங்., எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேச்சு

"கட்சியை அறிவிப்பது முக்கியம் கிடையாது, கொடி வெளியிடுவது முக்கியம் கிடையாது, இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்விலும் அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்." என்று காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கூறினார்.

author-image
WebDesk
New Update
karti chidambaram on TVK flag Actor Vijay Tamil News

"கருணாநிதி நாணயம் வெளியிட்டது தொடர்பான சர்ச்சையில், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்." என்று புதுக்கோட்டையில் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலை வகித்தார். அப்போது மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது, நிதி போதுமான அளவுக்கு உள்ளதா என்பது குறித்தும் அரசு அதிகாரிகளோடு ஆய்வு செய்தார். 

Advertisment

இதன்பின்னர், எம்.பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது. நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். நீட், ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவகாரங்களில் நடிகர் விஜயின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். இதுபோன்று, இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்விலும் அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். வெறும் கட்சியை அறிவித்துவிட்டு, கொடியை வெளியிட்டு விட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டும் பத்தாது. 

எல்லோருக்கும்தான் தமிழ் பற்று தேச பற்று  உள்ளது. எனக்கும் தான் தேசிய பற்று தமிழ் பற்று உள்ளது. அவரது கொள்கை என்பதை விவரிக்க வேண்டும். விஜய் தனது கொடியை அறிமுகப்படுத்திய வைத்து நான் எந்த கருத்தும் கூற முடியாது. தனியாக கட்சி நடத்துவது  எவ்வளவு சிரமம் என்பது பாட்டால் தான் விஜய்க்கு தெரியும். விஜயும் பட்டு தெரிந்து கொள்வார். 

முதலமைச்சரின் நிவாரண நிதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும், உயிர் இழப்புகள் ஏற்படும் போது அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும். 

'தலித் முதலமைச்சராக பா.ஜ.க சார்பில் அதிக அளவு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாய்ப்பு கொடுத்தால் பா.ஜ.க தலித் முதலமைச்சரை உருவாக்குவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா கூறுவதைப் பொறுத்தவரை, அவர் அண்ணாமலையை கேட்டு சொல்கிறாரா? இல்லை, அவரே பேசுகிறாரா? என்பது தெரியவில்லை. 

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாது. நடந்த பிறகு விசாரணையை விரைந்து நடத்தி குற்றவாளி கைது செய்து தண்டனை வாங்கித் தரலாம். இதற்கு சமுதாய மாற்றம் இருந்தால் மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும். ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்திலும் பெண்களை மதிப்பதற்கு ஆண்களுக்கு சிறு வயதிலிருந்து கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் மட்டுமே தீர்வு காண முடியாது. 

சீமான் - திருச்சி எஸ்.பி வருண் பிரச்சனையைப் பொறுத்தவரையில், சீமான் அரசியல் கருத்துக்களை பேச வேண்டுமே தவிர தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை குறித்தும், உங்களுடைய பிரச்சனையை குறித்தும் பேசுவது தவறு. சீமான் இவ்வாறு பேசுவது அரசியலுக்கு அழகல்ல 

வக்பு வாரிய சட்டத்திற்கு பாராளுமன்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முதல் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது இன்னமும் இரண்டு மூன்று கூட்டங்கள் நடத்தப்படும் அதில் எடுக்க முடிவு பொறுத்து இந்த சட்டம் நிறைவேறுவது குறித்து தெரியவரும். என்னை பொறுத்தவரை இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு கிடையாது. அதற்கு உண்டான பலமும் மத்திய அரசுக்கு கிடையாது. 

கருணாநிதி நாணய வெளிவிட்டு விழா தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை என்பது, கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதுதான் எனது பதில். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலுக்குப் பிறகு 100 நாள் வேலை திட்ட பணிகள் தொடங்கிவிட்டது என்றும், பணிகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. எந்தெந்த பணிகள் நடைபெறுவது எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினருக்கு இது குறித்து தெரியாமல் உள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இனி வரும் காலங்களில் இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

செய்தி: சக்தி சரவணக்குமார் - மதுரை மாவட்டம் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Vijay Tamilaga Vettri Kazhagam Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment