அமலாக்கத்துறையினருக்கு தசரா வாழ்த்து சொல்ல வந்தேன் – கார்த்தி சிதம்பரம்
Karti Chidambaram I’d come say hello to them for Dussehra:ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக டெல்லியில் அமலாக்கத்துறையின் முன்பு ஆஜாரான கார்த்தி சிதம்பரம், வெளியே வரும்போது என்ன காரணத்துக்காக இங்கே இருக்கிறீர்கள் என்று ஊடகங்கள் கேள்வி கேட்டதற்கு அவர்களுக்கு தசரா வாழ்த்து சொல்ல…
karti chidambaram leaving ed office, karti chidambaram dussehra wish to ed, karti chidambaram inx media case,கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, அமலாக்கத்துறையினருக்கு தசரா வாழ்த்து சொல்ல நினைத்தேன், கார்த்தி karti chidambaram bail, inx media case, Tamil indian express news
Karti Chidambaram I’d come say hello to them for Dussehra: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக டெல்லியில் அமலாக்கத்துறையின் முன்பு ஆஜாரான கார்த்தி சிதம்பரம், வெளியே வரும்போது என்ன காரணத்துக்காக இங்கே இருக்கிறீர்கள் என்று ஊடகங்கள் கேள்வி கேட்டதற்கு அவர்களுக்கு தசரா வாழ்த்து சொல்ல வந்தேன் என்று கூறியுள்ளார்.
2007 ஆம் ஆண்டில் ரூ .305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றதற்காக ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்திற்கு வழங்கப்பட்ட அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (எஃப்.ஐ.பி.பி) அனுமதியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ மே 2017 அன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கார்த்தி சிதம்பரத்தையும் அவரது தந்தை ப.சிதம்பரத்தையும் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் தற்போது சிபிஐ தாக்கல் செய்த ஊழல் வழக்கு தொடர்பாக நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்த சூழலில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் புதன்கிழமை அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜரானார். பிறகு வெளியே செல்லும் போது, கார்த்தியிடம் ஊடகங்கள் என்ன விஷமாக இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தசராவுக்கு அவர்களை வாழ்த்துவதற்காக வந்திருக்கிறேன் என்று கூறினார்.
#WATCH Delhi: Karti Chidambaram appears before Enforcement Directorate in connection with the INX Media money laundering case; says, " I just thought to come and say hello to them for Dussehra". pic.twitter.com/hI0sch3Ot5
இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள 12 விநாடி வீடியோவில், கார்த்தி சிதம்பரம் தனது வழக்கறிஞருடன் சேர்ந்து பின்வருமாறு கூறுகிறார்: “தசராவுக்கு அவர்களுக்கு ஹலோ சொல்ல நினைத்தேன்.” என்று கூறுகிறார்.