சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரத்திடம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதில் அளித்த அவர், “ராகுல் காந்தி இந்தியாவில் ஜனநாயகம் குறைகிறது என இங்கிலாந்தில் பேசிய உரை முழுக்க முழுக்க உண்மை.
நமது நாட்டில் அதன்படி தான் நடந்துவருகிறது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை நாங்கள் மக்கள் மன்றத்தில் எடுத்துக் கொள்வோம்.
நீதிமன்றத்தில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்க வேண்டும், பாராளுமன்றத்தில் நெறிக்க வேண்டும் என்பதற்காகதான் இதுபோல் நடக்கின்றன.
ஹசல் முகம்மதுவுக்கு எப்படி வெற்றி கிடைத்தோ அவ்வாறு எங்களுக்கும் வெற்றி கிடைக்கும்” என்றார். அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, கார்த்தி ப சிதம்பரத்தை சந்திக்க மறுத்துவிட்டார்.
இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போதும் ராகுல் காந்தி அவரிடம் கை கொடுக்காமல் விலகி சென்றுவிட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“