பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை  நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை  நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
vinoth

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேனாம்பேட்டைபகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவரை கிண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கருக்காவினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்கநேற்றுமுன்தினம் கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இது தொடர்பாகவழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தை இன்று காலை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டைநீதிமன்ற 9வது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினார்.

அப்போது நீதிபதி சந்தோஷ், போலீஸார் கோரிக்கையை ஏற்று கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதியளித்து உத்தரவிட்டார். இதையடுத்து கிண்டி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ரகசிய இடத்திற்குஅழைத்துச் சென்றனர். மேலும் கருக்கா வினோத்திடம் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடிபட்டார், அவரது பின்னணி குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: