கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் கருணாநிதி 100 நாணய வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த தி.மு.க தலைவர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி கருணாநிதி தொடர்பாக புகழந்து பேசி உள்ளார். தமிழகத்தில் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர் கருணாநிதி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார்.
பிரதமரின் வாழ்த்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், “ பிரதமர் மோடிக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய அன்பான வாழ்த்துகக்ளும் ஆதரவும்” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“