கருணாநிதி உதவியாளர் :
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு அந்த கட்சிக்கு பெரிய இழப்பு. ஆனால் அவரின் உதவியாளர் சண்முகத்திற்கு கருணாநிதியின் இழப்பு வேறு எவராலும் ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பு.
50 ஆண்டுகளாக கருணாநிதியின் வலதுப்புறத்தில் உதவியாளராக நின்றுக் கொண்டிருந்தவர் இன்று அவரின் தலைமடியில் அமர்ந்துக் கொண்டிருக்கிறார். கோபாலபுர இல்லம், முரசொலி அலுவலகம், அரசியல் மேடைகள் என கருணாநிதி செல்லும் அனைத்து இடங்களிலும் அவருடன் செல்லும் ஒரே நபர் உதவியாளர் சண்முகநாதன் தான்.
1996 ஆம் ஆண்டு கருணாநிதியிடம் நேர்முக உதவியாளராக பணிக்கு சேர்ந்த சண்முகம் தொடர்ந்து 50 ஆண்டுகளாக அவருடன் இருந்துள்ளார். கருணாநிதியை சந்திக்க வரும் முக்கிய தலைவர்கள், கழக நிர்வாகிகள் என அனைவரும் குட்டி பி.ஏ.’ எ என்று தான் சண்முகநாதனை அழைப்பார்கள்.
அவருக்கும் கருணாநிதிக்கும் இடையேயான உறவு அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்று. கருணாநிதியின் கண் அசைவுக்கு என்ன அர்த்தம்? அவர் சந்திக்கலாம் என்றால் என்ன அர்த்தம்? எப்போதும் தூங்குவார்? எப்போது கண் விழிப்பார்? என கருணாநிதியை பற்றி தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருப்பவர் இவரே.
கோபாலபுரத்தில் சண்முகநாதன்
சண்முகநாதன் தனது 50 ஆண்டு பணியில் இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார். அவரின் பிரிவு தன்னை மிகவும் பாதித்ததாக கருணாநிதி தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.
சண்முகநாதனை கருணாநிதி எப்படி இந்த பணிக்கு அழைத்துக் கொண்டார் என்பதை, அவரே ஒருமுறை தெரிவித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு சண்முகநாதனின் இல்லத்திருமண் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துக் கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர், இந்த ருசிகர தகவலையும் வெளியிட்டார். அந்த விழாவில் கருணாநிதி பேசியதாவது “ முன்பெல்லாம் பேராசிரியர், என் போன்றோரின் பேச்சுகளை உடனுக்குடன் பதிவு செய்து எழுதி மேலிடத்துக்கு அனுப்பும் பணியை காவல் துறையின் துப்பறியும் பிரிவினர் மேற்கொள்வர்.
அப்படி பதிவு செய்த பேச்சுகளை வைத்து வழக்கும் போடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை என் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு போடும் அளவுக்கு அப்படி என்ன நான் பேசிவிட்டேன் என்பதை அறிய, போலீஸிடமிருந்த எனது பேச்சு நகலை வாங்கிப் பார்த்தேன். வியந்தும் போனேன்.
குடும்பத்துடன் சண்முகநாதன்
என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகனின் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுகளெல்லாம் அப்படியே எழுத்து வடிவமாகப் பதிவாகி யிருந்தது. ஒரு எழுத்துகூட தவறாமல் அத்தனையும் பதிவாகி இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ’
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ‘நீங்கள் இப்படிப் பேசினீர்களா?’ என்று நீதிமன்றத்தில் கேள்வி கள் கேட்ட நேரத்தில், ‘மனச் சாட்சிப்படி உண்மைதான், அவை நாங்கள் பேசியது தான்’ என்று ஒப்புக்கொள்ளவும் நேரிட்டது.
யார் இவ்வளவு தெளிவாக எங்கள் பேச்சை அச்சு அசலாக படியெடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோதுதான், சண்முக நாதன் பற்றி எனக்கு தெரிய வந்தது. நான் அமைச்சரானபோது, பி.ஏ.வாக யாரைப் போடலாம் என யோசித்த நேரத்தில் சண்முகநாதன்தான் நினைவுக்கு வந்தார். அந்தத் தம்பியை வைத்துக் கொள்கிறேன் என்றேன்.
சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னு டைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்” என்று உருக்கமாக கூறி இருந்தார்.
நியாயப்படிப் பார்த்தால் சண்முகநாதனின் மீது கருணாநிதிக்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும். முதன்முறை கலைஞர் உங்களை அழைத்து வரசொன்னார் என்று சண்முகநாதனை நிர்வாகிகள் அழைத்தப்போது கூட அவருக்கும் இப்படி தான் தோன்றியிருக்கும். ஆனால் அவரின் எழுத்து வடிவத்தைக் கண்டு அவரையே தனது உதவியாளராக மாற்றிக் கொண்டார் கருணாநிதி.
கலைஞர் தொடர்ந்து 14வது முறையாக வெற்றி தொகுதி மெரினா