Advertisment

ராகுல் காந்தி சென்றதுதான் நடைபயணம்: அண்ணாமலையை வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்!

கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை சென்ற ராகுல் காந்திதான் உண்மையான நடைபயணம் மேற்கொண்டார்; அண்ணாமலை பாதி யாத்திரை மேற்கொள்கிறார் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Karunanidhi Centenary General Meeting at Nagercoil

நாகர்கோவிலில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்பு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், தாமரை பாரதி உள்ளிட்டோர் பேசிய பின்னர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

Advertisment

அப்போது திமுக உடன் தொடர்பு, மகேஷ் உடன் நட்பு என கடந்த கால நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். தொடர்ந்து, அண்ணாமலை பாத யாத்திரை செல்லவில்லை; பாதி யாத்திரை செல்கிறார்.

ராகுல் காந்தி கன்னியாகுமரி-காஷ்மீர் வரை சென்றதுதான் நடைபயணம்” என்றார். முன்னதாக நீட் தேர்வு பற்றிய நாஞ்சில் சம்பத், “இந்தத் தேர்வு மருத்துவ மாணவர்களின் கனவை பாலைவனம் ஆக்கியுள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து, “மூன்று முறை பிரதமர் பதவியை அலங்கரித்தவர் ஜவஹர்லால் நேரு மட்டும்தான். அது இன்னொருவருக்கு கிடைக்காது.

2024 மக்களவை தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்” என்றார். இதையடுத்து, “மு.க. ஸ்டாலின் பின் அணி ஆவோம், ஆதரவாவோம், வேண்டும் என்றால் ஆயுதம் ஆவோம்” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Nagercoil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment