scorecardresearch

21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் நல்லடக்கம்!

Kalaignar Karunanidhi Burial: அண்ணா சதுக்க வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

கருணாநிதி உடல் நல்லடக்கம்
கருணாநிதி உடல் நல்லடக்கம்

21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்று (ஆகஸ்ட் 8) அதிகாலை முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அதுவரை அவரது உடல் எங்கே அடக்கம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

கருணாநிதி இறுதி அஞ்சலி: ராஜாஜி ஹாலை மூழ்கடித்த தொண்டர்கள் வெள்ளம், மோடி-தலைவர்கள் நேரில் வருகை To Read, Click Here

கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா சதுக்க வளாகத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதிக்கவில்லை. திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இன்று மதியம் மெரினாவில் அண்ணா சமாதியின் பின்பகுதியில் அடக்கம் செய்ய அனுமதி பெற்றனர்.

மொத்த திமுக தொண்டர்களையும் எமோஷனலாக ஆரவாரப்படுத்திய உத்தரவு இது! இதன்பிறகு பிரதமர் மோடி உள்பட தேசிய, மாநில தலைவர்கள் பலரும் வரிசையாக ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் காலை 7 மணிக்கே வந்து அஞ்சலி செலுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

Karunanidhi Funeral Procession
கருணாநிதி இறுதி ஊர்வலப் பாதை

தமிழ்நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்தார்.

DMK Chief Kalaignar Karunanidhi Burial: கருணாநிதி இறுதி நல்லடக்கம்

07.00 PM:  21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்களும் மரியாதை செலுத்தினர். அதன்பின், ஓய்வறியா சூரியன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


06.50 PM: கருணாநிதியின் உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது.

06.43 PM:  குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, கழக பொதுச் செயலாளரும், துணை பேராசிரியருமான அன்பழகன், ஸ்டாலின் துணையோடு வந்து தன் நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கண்ணீருடன் கருணாநிதி குடும்பத்தினர்

06.36 PM:  கருணாநிதி மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. இதன்பின், குடும்ப உறுப்பினர்கள், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டாலின் கைகளில் தேசியக் கொடி
ஸ்டாலின் கைகளில் தேசியக் கொடி

6:30 PM: ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, குலாம் நபி அசாத், வீரப்ப மொய்லி, பொன்.ராதாகிருஷ்ணன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

6:15 PM: மெரினாவில் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

6:05 PM: கருணாநிதி இறுதி ஊர்வலம் மெரினா கடற்கரைக்கு வந்தடைந்தது. அண்ணா நினைவிடத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்துள்ளார். மேலும், ராகுல் காந்தி, பேராசிரியர் அன்பழகன், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ள பேராசிரியர் அன்பழகன்

5:45 PM: கருணாநிதி இறுதி ஊர்வலம் வாலஜா சாலையை கடந்து மெரினாவை அடைகிறது. தேவகவுடா, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்த அங்கு காத்திருக்கிறார்கள். தொண்டர்கள் வாழ்த்து முழக்கம் எழுப்ப, ஊர்வலம் நகர்கிறது.

5:30 PM: திமுக தலைவர் கருணாநிதியை சுமந்து செல்லும் ராணுவ வாகனத்திற்கு பின்னால் ஸ்டாலின் நடந்து செல்கிறார்.

5:15 PM: கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஜெயகுமார், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மெரினாவில் அண்ணா சதுக்கம் வந்திருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அஞ்சலி செலுத்துகிறார்.

கருணாநிதியின் நல்லடக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், மத்திய இணையமைச்சர் பொன்.ராதா

5:00 PM : கருணாநிதியின் இறுதி ஊர்வலம், வாலாஜா சாலையில் வந்து கொண்டிருக்கிறது.

4:40 PM: மவுண்ட் ரோடு என்கிற பெயரை அண்ணா சாலை என மாற்றிய கருணாநிதி அதே சாலையில் லட்சக்கணக்கான தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்தபடி தனது இறுதி பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

4:20 PM: ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை வழியாக பெரியார் சிலையை கடந்து, அண்ணா சிலை பகுதியை நோக்கி ஊர்வலம் பயணிக்கிறது.

4:00 PM : கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு, இறுதி ஊர்வலம் தொடங்கியது.

3:35 PM: கருணாநிதியின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். வாகனத்தின் பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் அணிவகுத்து வருகிறார்கள். இதற்காக சற்று முன்பு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம், ராஜாஜி ஹாலுக்கு வந்து சேர்ந்தது.

Karunanidhi Funeral Procession LIVE UPDATES: கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் கதறிய பெண்கள்
Karunanidhi Funeral Procession LIVE UPDATES: கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் கதறிய பெண்கள்

3:30 PM: கருணாநிதியின் இறுதி ஊர்வலப் பாதையை திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தனது அறிக்கையில் வெளியிட்டார். அதன்படி சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் இருந்து மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.

இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை வழியாக மவுண்ட் ரோடு என்கிற அண்ணா சாலையை அடைகிறது. அங்கிருந்து சிம்சன் சந்திப்பு பெரியார் சிலை வழியாக அண்ணா சிலை பகுதியை அடைகிறது. அங்கிருந்து வாலஜா சாலை வழியாக சென்னை பல்கலைக்கழக வலதுபுறமாக கடற்கரை சாலையை அடைகிறது. காமராஜர் சாலை எனப்படும் அங்கு மெரினாவில் உள்ள அண்ணா சதுக்க வளாகத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் நடைபெற இருக்கிறது.

Karunanidhi Burial: கருணாநிதி உடல் நல்லடக்கம்

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Karunanidhi funeral procession live updates