மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று (ஆக. 7) திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர்.
இந்த அமைதி பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கலைஞருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, ”மாறுபட்ட கொள்கை உடையவனாக நான் இருந்தாலும் கடைசிவரை தனிப்பட்ட முறையில் என் மேல் அன்பு செலுத்திய “கலைஞர்” நான் மறக்க முடியாதவர். பஞ்சாயத்து, மாநில, மத்திய அரசு என ஆளுமை செய்தவர். அவர் நினைவுகளுடன்.
இந்த வீடியோ போட்டவுடன் திமுகவிற்கு போறீங்களா, அங்க துண்டு போட்டாச்சா? போன்ற அல்ப கேள்விகளுக்கு என்னை நன்கு தெரிந்தவர்களிடம் என்னைப்பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். என் அரசியல் காட் ஃபாதர் திரு. மோடிஜி, என் ராஜகுரு திரு.சோ, இதுதான் என்னுடைய அரசில் நிலைப்பாடு” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
சில திமுக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை டேக் செய்து, ”எதிரிகளும் உன் ரசிகப் படையிலே!”… அனைவருக்குமான தலைவர் என் தானைத் தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக…. #என்றென்றும்கலைஞர் என்று பெருமிதத்துடன் கமென்டில் பதிவிட்டுள்ளனர்….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“