சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவிடம் அருகே அமைய உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி செலவில் பேனா வடிவம் நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மேண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி இருந்தது. இந்த நிலையில், சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது.
பொதுமக்களிடம் இத்திட்டம் தொடர்பாக கருத்து கேட்டு, மாசு காட்டுபாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“