மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவிடம் அமைக்க மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.
இது, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து இந்த பேனா நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது. மேலும் கண்ணாடி பாலமும் கட்டப்பட உள்ளது.
தற்போது இதற்கான மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் 2023 ஜனவரி மாதம் 31ஆம் தேதி நடைபெறும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தற்போது நினைவு சின்னம் அமைய உள்ள கடலோர பகுதிகள் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மனு ஒன்றும் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் மத்திய- மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/