Advertisment

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் வழக்கு: புதிய சிக்கல்? பசுமை தீர்ப்பாயம் போட்ட உத்தரவு

மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
karunanidhi pen statue; TN Govt letter to Central Govt approval Tamil News

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் ரூ.81 கோடி செலவில் சென்னை மெரினா கடலில்  134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்கியது. 

Advertisment

கடலில் நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள், நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை பேனா சின்னம் அமைக்க அனுமதி வழங்கியதை எதிர்த்து, தூத்துக்குடியை சேர்ந்த ராம் ஆதித்தன் என்பவர் இன்று மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல் இதற்கு முன்னர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன், சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் சென்னை சேப்பக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அமர்வு முன் இந்த மனுக்கள் நேற்று(அக்.9) விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ராம்குமார் ஆதித்தன் தரப்பில், கடலோர ஒழுங்குமுறை மண்டல வகைப்பாட்டில் CRZ 1A என்ற பிரிவில் வரும் பகுதியை CRZ 4A எனக் கூறி நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறினார்.

மீனவர் பாரதி தரப்பில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தரவுகளில் பிழை உள்ளதாகவும், தவறான தரவுகள் மூலம் இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார்.  மேலும், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு முறையாக நடத்தப்படவில்லை. பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி முறையானது இல்லை எனவும் வாதிடப்பட்டது.

இதனைக் கேட்டறிந்த தீர்ப்பாய அமர்வு, நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவம்பர் 6-ஆம் தேதிக்கும், சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment