திராவிட இயக்கப் பெருந்தலைவர்களில் தவிர்க்க முடியாத தனிப் பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி. பெரியார், அண்ணா வழியில் பீடு நடை போட்டு வந்த கருணாநிதியின் வாழ்க்கைப் பாதையில் ரோஜாப் பூக்களை விட முட் புதர்களே அதிகம்.
வாழ்க்கையே போராட்டம் என்று வர்ணிப்பவர்கள் மத்தியில் போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் திமுக தலைவர் கருணாநிதி. ஒரு தலைவரலால் தன் மரணத்தை இப்படி கூட வர்ணிக்க முடியுமா என்று ஆச்சரியமூட்டிய அவரின் வரிகள் இதோ “ மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன்.. ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியினாலும் மத வெறியினாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன். ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு, அண்ணாவின் கொள்கைப் பாதுகாவலன்”
திமுகவின் வேர்களின் வெந்நீர் ஊற்றியபோதும் அதன் ஆணிவேராய் மட்டுமின்றி அனைத்துமாய் நின்று கட்டி காத்தவர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல. இபப்டி கலைஞரின் சாதனைகளும், வாழ்க்கையில் அவர் கண்ட போராட்டங்களும் ஏராளம்.கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை உயிரோட்டமான உறவை கடைபிடித்தவர் கருணாநிதி.
Advertisment
Advertisements
திமுகவின் உதய சூரியனாக இருந்த கலைஞர் இன்று உதிக்க முடியாத சூரியனாக மறைந்து விட்டார். ஆனால் அவர் செய்த சாதனைகளும், அவர் அடைந்த புகழ்களும் என்றும் அழியாதவை. இதோ அவரை பற்றி அண்ணா முதல் அஜித் வரை பேசிய காலத்தால் அழிக்க முடியாத பேச்சுகள்.
1. கலைஞரின் 45 ஆவது பிறந்த நாள் விழாவில், கலைஞர் கருணாநிதி குறித்து பேரறிஞர் அண்ணா பேசியது.
2. கலைஞரின் பவளவிழாவில் நடிகர் திலகம் பேசிய உருக்கமான வீடியோ
3.கருணாநிதி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது
4. பாசத்தலைவருக்கு பாராட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது
5. கலைஞர் கருணாநிதி குறித்து நடிகர் விஜய் பகிர்ந்துக் கொண்ட சிறப்பு பகிர்வு
6. 1997-ல் கலைஞரின் தலைமையில் நடந்த கவியரங்கங்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு