முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி வினாடி வினா போட்டியை கடந்த மாதம் (செப்டம்பர்) 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட கலைஞர் 100 வினாடி-வினா போட்டியில் 50,000த்துக்கும் மேற்பட்ட குழுவினர் பதிவுசெய்து ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
இதற்கிடையில், இதுவரை, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 97 பேர் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர் என்றும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 365 பேர் www.kalaignar100.co.in இணைய தளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், 50,000 திற்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்துள்ளன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தப் போட்டியில், மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெறவுள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்தப் பரிசுகளை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழங்குவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“