/tamil-ie/media/media_files/uploads/2018/12/a133-1.jpg)
சர்பிரைஸ் கொடுத்த ரஜினி... வடிவேலு பேக்.... கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு
தேசிய தலைவர்களின் புடைசூழ, கருணாநிதி சிலைத் திறப்பு விழாவை வெற்றிகரமாக அரங்கேற்றியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நீண்ட நாட்களாக தமிழகம் பக்கமே தலை வைத்துப்படுக்காமல் இருந்த சோனியா காந்தியை, சிலை திறப்பை காரணமாக வைத்து, சென்னைக்கு வர வைத்து காங்கிரசுடனான கூட்டணியை சிமென்ட் பூசி மேலும் பலப்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின். இவையனைத்தையும் விட, 'ராகுல் காந்தியே வருக... நாட்டை காத்திட வருக...' என்று பிரதமர் வேட்பாளராகவே நேரடியாக அத்தனை தலைவர்களின் முன்பு பிரகடனப்படுத்தி இருக்கிறார். அனேகமாக, தேசிய அளவில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்த தலைவர் ஸ்டாலினாகத் தான் இருக்க முடியும். வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன் மொழியவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், அதுகுறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், ஸ்டாலினின் இந்த ஓப்பன் டிக்ளேர், விழாவிற்கு வந்திருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பெரிதாகவே கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளதாம். ஏனெனில், ஆந்திராவில் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு தான் சந்திரபாபுவிற்கு என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் நடந்த கலைஞர் சிலை திறப்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள, ரஜினி, பிரபு, வடிவேலு, நாசர் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதன் ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு இதோ,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.