karunanidhi statue : திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசியல் தலைவர்களில் கலைஞர் கருணாந்தி காலம் என்பது வரலாற்றில் அவ்வளவு எளிதாக மறைந்து விடாது. ‘முத்துவேல் கருணாநிதி’ அவரின் முழுப்பெயரை விட கலைஞர் என்பது தான் அனைவருக்கும் பரீட்சையமான ஒன்று. 50 ஆண்டுகள் அரசியல் வரலாற்றில் ஒரு வலிமையான சக்தியாக அனைவராலும் உணரப்பட்டவர்.
தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். அவருட்டைய கரகர குரலில் “என் உயிருக்கும் உயிரான உடன்பிறப்புகளே” என்ற வார்த்தைகளை மீண்டும் கேட்க இயலுமா என்றால் சாத்தியம் இல்லை. ஆனால் அவரின் புகழ் இன்னும் எத்தனையோ தலைமுறைகளை தாண்டி பேசப்படும் என்பதில் ஐயளவும் சந்தேகமில்லை.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதி தனது 94 ஆவது வயதில் மரணமடைந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு மருத்துவமனை வளாகத்தில் ”மீண்டு(ம்) வா தலைவா இல்லம் போகலாம் என ஆர்ப்பரித்த தொண்டர்கள் கூட்டம் இன்று மீண்டும் பிறந்து வா தலைவா என இதய குரலில் உரைக்கிறது. ஓய்வறியாச் சூரியன் ஓய்வெடுக்கச் சென்று ஓராண்டுகள் முடிந்த இந்நாளில் அவரை குறித்து நினைவு கூற வேண்டிய முக்கிய தகவல்கள் சிறப்பு தொகுப்பாக இதோ உங்கள் பார்வைக்கு!
/tamil-ie/media/media_files/uploads/2018/08/1-4.jpeg)
1. 1969ல் அண்ணாவின் மறைவிற்கு பின்பு கருணாநிதி முதல்வராக பதவியேற்பதற்கு பெரிதும் உறுதுணையாக நின்றவர் எம்.ஜி.ஆர் தான். இதை ஒருபோதும் கலைஞர் மறுத்ததும் இல்லை. மறுக்கவும் இல்லை.
2. இரு துருவங்களாக் செயல்பட்ட கருணாநிதி, ஜெயலலிதா மறைவு தமிழகத்தில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. முதலில் மறைந்தவர் ஜெயலலிதா தான். இவரின் இறப்பு செய்தியை கேட்டவுடன் கலைஞர், தனது மகனும், தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து உடனே நேரில் செல் என்று உருக்கமாக கூறினாராம்.
3. அண்ணா வழியில் பீடு நடை போட்டு வந்த கருணாநிதியின் வாழ்க்கைப் பாதையில் ரோஜாப் பூக்களை விட முட் புதர்களே அதிகம்.வாழ்க்கையே போராட்டம் என்று வர்ணிப்பவர்கள் மத்தியில் போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் திமுக தலைவர் கருணாநிதி. ஒரு தலைவரலால் தன் மரணத்தை இப்படி கூட வர்ணிக்க முடியுமா என்று ஆச்சரியமூட்டிய அவரின் வரிகள் இதோ “ மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன்.. ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியினாலும் மத வெறியினாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன். ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு, அண்ணாவின் கொள்கைப் பாதுகாவலன்”
கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணி
4. சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே திமுக அரசைப் பற்றி விமர்சிக்கும் போது, "இது மூன்றாம் தர சர்க்கார்" என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் கையமர்த்திவிட்டு, "டாக்டர் ஹண்டே இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!" என்று கருணாநிதி குறிப்பிட்டார்.
5. நீதிக்கட்சியின் முக்கிய பதவியில் இருந்த அழகிரிசாமியின் நட்பு கருணாநிதிக்கு கிடைக்கவே அவர் அரசியல் வர முக்கிய காரணமாக இருந்தது.இதனால் கருணாநிதி தன் மகனுக்கு அழகிரிசாமியின் நினைவாக அழகிரி என பெயர் வைத்தார்.கருணாநிதி 10 சமூக நாவல்களையும் ,6 சரித்திர நாவல்களையும் எழுதி உள்ளார்.
6. பராசக்தியின் நீதிமன்ற காட்சியில் மட்டுமல்ல, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வசனங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல் அரசியல் பேசும். மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி பராசக்தி என அன்றைய சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக கருணாநிதி இருந்தார்.
7. கருணாநிதிக்கு'கலைஞர்'என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய,'தூக்குமேடை’ என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார். இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.