திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை (16.12.18) நடைபெறுகிறது.இந்த விழாவில் யார் யார் பங்கேற்பார்கள்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு :
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா, அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்ப்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
கருணாநிதி சிலைத் திறப்பு விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை சிலையை திறக்க உள்ளார்.அதேபோல் சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்.இந்த விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிலைத் திறப்பு விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்பார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், தேசிய கட்சித் தலைவர்கள் பங்கேற்பதால் அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் . இதற்காக அண்ணா அறிவாலயத்தைப் போல் காட்சியளிக்கும் பிரமாண்ட மேடை தயாராகிறது. நாளை சென்னை வரும் சோனியா காந்தி, கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்த பின்னர் கூட்டத்தில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ரஜினி கலந்துக்கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
வழக்கம் போல் இந்த விழாவில் பாஜகவுக்கு அழைப்பு இல்லை . இதுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், “ கருணாநிதி சிலைத் திறப்பு விழாவுக்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. அது அவரின் விருப்பம்' என்று தெரிவித்துள்ளார்.