அண்ணா அறிவாலயத்திற்கு விசிட் அடித்தார் கருணாநிதி!

சக்கர நாற்காலியில் இருந்தபடி வந்த அவரை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

கோபாலபுரத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு திடீரென்று  அண்ணா அறிவாலயம் சென்று நிர்வாகிகளை சந்தித்தார்.

தி.மு.க.தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை கேபாபாலபுரம் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். எனினும் அவ்வப்போது அவரது புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.  கடந்த பத்து மாதங்களாக கோபாலபுரம் இல்லத்தை விட்டு வெளியே செல்வதும் முழுவதுமாகக் குறைந்திருந்த கருணாநிதி தற்போது அவ்வப்போது அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகங்களுக்கு சென்று வருகிறார்.

உடல் நலக் குறைவால் வீட்டிலியே முடங்கி இருந்த கருணாநிதி தற்போது பழைய உற்சாகத்தையும் தெம்பையும் பெற்று வருவது திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று(20.4.18) இரவு 8 மணிக்கு கருணாநிதி திடீரென்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். உடல் நலக்குறைவுக்கு ஆளான பின்னர், கருணாநிதி அறிவாலாயம் வந்தது மூன்றாவது முறையாகும்.  சக்கர நாற்காலியில் இருந்தபடி வந்த அவரை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளார் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வரவேற்று, அழைத்துச் சென்றனர்.

அப்போது, அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள்  கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அண்ணா அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி!!

அண்ணா அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி!!

Posted by IETamil on 20 एप्रिल 2018

 

×Close
×Close