முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. (Express archive photo)
தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் கருணாநிதி. இன்று கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை நீங்கள் பார்த்திராத கலைஞரின் அரசியல் பயணத்தின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ! (Express archive photo)
இரண்டாவது மனைவி தயாளுவுடன் கருணாநிதி (Express archive photo)
5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 1969 முதல் திமுக தலைவராக பதவி வகித்தார். (Express archive photo)
60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்க்கையில் இருந்த கருணாநிதியின் முதல் அரசியல் எண்ட்ரி அவரது 14வது வயதில் தொடங்கியது. மாநிலத்தில் அவருக்கு மிகப்பெரிய அரசியல் எதிரியாக இருந்தவர் அதிமுகவின் எம்.ஜி.ஆர். பின்னர் ஜெயலலிதா. (Express archive photo)
1957-ல் பிரிக்கப்படாத திருச்சிராப்பள்ளியில் இருந்த குளித்தலையில் இருந்து முதன்முதலில் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.
படம்: தமிழ்நாடு இல்லத்தில் கூட்டணிக்கான கூட்டத்தில் ப.சிதம்பரம், கருணாநிதி, சந்தர் பாபு நாயுடு, ஜி.கே.மூப்பனார் மற்றும் எச்.டி.தேவேகவுடா. (Express archive photo)
தமிழ் சினிமாவில் அரசியல்வாதி மட்டுமல்லாது நாடக ஆசிரியராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர். படம்: கருணாநிதியிடம் இருந்து விருது பெறும் நடிகர் கமல்ஹாசன். (Express archive photo)
2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அதன்பிறகு கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பிறகு, அவரது மகன் மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றார்.
படத்தில்: சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுடன் எம் கருணாநிதி. (Express archive photo)
1969 ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற கருணாநிதி, ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். (Express archive photo)
மகன் அழகிரியுடன் கருணாநிதி (Express archive photo)
கருணாநிதியின் கோப்பு புகைப்படம் (Express archive photo)
டெல்லியில் நடந்த சந்திப்பின் போது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடன் கருணாநிதி. (Express archive photo)
புதுதில்லியில் மு.கருணாநிதியுடன் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். (Express archive photo)
அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமனுடன் எம் கருணாநிதி. (Express archive photo)
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இந்திய ராணுவ வீரர்களுக்கான மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய பெட்டியை கருணாநிதி வழங்கியபோது. (Express archive photo)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.