/indian-express-tamil/media/media_files/2025/07/19/mk-muthu-2025-07-19-18-00-47.jpg)
மு.க.முத்து மறைவு
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக் குறைவால் காலமானார், அவரது உடல், சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய சகோதரருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதியருக்குப் பிறந்தவர் மு.க. முத்து. கருணாநிதியின் கலையுலக வாரிசாகக் கருதப்பட்டவர், அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்டப் படங்களில் நடித்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Jul 19, 2025 18:02 IST
மு.க.முத்துவின் உடல் தகனம் - ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. முத்து வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்ய சென்னை பெசன்ட் நகர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு நடந்தது. அப்போது மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
-
Jul 19, 2025 17:46 IST
மு.க.முத்து மரணம் - இறுதி சடங்கு தொடக்கம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. முத்து வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டு தற்போது இறுதி சடங்கு நடந்து வருகிறது.
-
Jul 19, 2025 17:26 IST
மு.க.முத்து மரணம் - உடல் நல்லடக்க பேரணி தொடக்கம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. முத்து வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. தற்போது மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்படுகிறது.
#WATCH | மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்படுகிறது!#RIPMKMuthu | #Gopalapuram | #KalaignarSeithigal pic.twitter.com/xhhLDDtaxz
— Kalaignar Seithigal (@Kalaignarnews) July 19, 2025 -
Jul 19, 2025 16:42 IST
மு.க. முத்து உடலுக்கு தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி
மறைந்த மு.க. முத்துவின் உடலுக்கு, பா.ஜ.க முத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தனர்.
-
Jul 19, 2025 16:02 IST
மு.க. முத்து உடலுக்கு நடிகர் விக்ரம் நேரில் அஞ்சலி
மறைந்த மு.க. முத்துவின் உடலுக்கு திரைத் துறையைச் சேர்ந்த பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதன்படி, நடிகர் விக்ரம் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
-
Jul 19, 2025 15:24 IST
மு.க. முத்து மரணம் - அண்ணன் உடலைப் பார்த்து கதறி அழுத அழகிரி
மு.க. முத்துவின் உடல் கோபாலபுரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அவருடைய சகோதரர் அழகிரி வருகை தந்தார். அப்போது, தனது அண்ணனின் பிரிவை தாங்க முடியாமல், அழகிரி கதறி அழுதார்.
#WATCH | மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி அஞ்சலி!
— Kalaignar Seithigal (@Kalaignarnews) July 19, 2025
சென்னை கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடலுக்கு, மு.க.அழகிரி நேரில் அஞ்சலி!#RIPMKMuthu | #MKAlagiri | #KalaignarSeithigal pic.twitter.com/Fb4tGgmpC6 -
Jul 19, 2025 15:16 IST
கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மு.க. முத்துவின் மனைவி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலைக் காண, அவருடைய மனைவி வருகை வருகை தந்தார்.
-
Jul 19, 2025 14:54 IST
மு.க.முத்து மறைவு - மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்
"கலைஞரின் புதல்வரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரைத் தருகிறது. அவருக்கு என் இரங்கல்கள். அவர்தம் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Jul 19, 2025 14:37 IST
மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி அஞ்சலி!
சென்னை கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடலுக்கு, மு.க.அழகிரி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | #RIPMKMuthu | #MKAlagiri | #KalaignarSeithigal pic.twitter.com/Fb4tGgmpC6
— Kalaignar Seithigal (@Kalaignarnews) July 19, 2025 -
Jul 19, 2025 14:36 IST
மு.க.முத்து உடலுக்கு கனிமொழி எம்.பி அஞ்சலி!
சென்னை கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடலுக்கு, கனிமொழி எம்.பி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | #RIPMKMuthu | #KanimozhiMP | #KalaignarSeithigal pic.twitter.com/N4US6dY3ZX
— Kalaignar Seithigal (@Kalaignarnews) July 19, 2025 -
Jul 19, 2025 14:24 IST
மு.க.முத்து மறைவுக்கு, முத்தரசன் இரங்கல்!
“முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து காலமானார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். அவரை இழந்து வாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.' CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Jul 19, 2025 14:02 IST
நடிகர் சத்யராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மு.க.முத்துவின் உடலுக்கு நடிகர் சத்யராஜ் அஞ்சலி செலுத்தினார்.#WATCH | .#RIPMKMuthu | #Gopalapuram |… pic.twitter.com/Dp5TqpJfwq
— Kalaignar Seithigal (@Kalaignarnews) July 19, 2025 -
Jul 19, 2025 13:59 IST
மு.க.முத்துவின் உடலுக்கு அமைச்சர் துரைமுருகன் அஞ்சலி!
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து அவர்களின் உடலுக்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | #RIPMKMuthu | #DuraiMurugan | #KalaignarSeithigal pic.twitter.com/22FgcRsA9l
— Kalaignar Seithigal (@Kalaignarnews) July 19, 2025 -
Jul 19, 2025 13:45 IST
மு.க.முத்து உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு.க.முத்து வயது மூப்பின் காரணமாக காலமானதையொட்டி, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
#WATCH | மு.க.முத்து உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு!
— Kalaignar Seithigal (@Kalaignarnews) July 19, 2025
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு.க.முத்து வயது மூப்பின் காரணமாக காலமானதையொட்டி, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
துணை… pic.twitter.com/MzYr5qkiCx -
Jul 19, 2025 13:25 IST
மு.க.முத்து மறைவுக்கு அமைச்சர் இரங்கல்!
"முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், கழகத் தலைவர் தளபதி அவர்களின் சகோதரருமான அண்ணன் மு.க.முத்து அவர்கள் உடன் நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். துயர் நிறைந்த இவ்வேளையில், அண்ணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று
அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். -
Jul 19, 2025 13:24 IST
பிரபலங்கள் அஞ்சலி...!
கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
Jul 19, 2025 13:24 IST
மு.க.முத்து மறைவுக்கு அன்புமணி இரங்கல்..!!
மு.க.முத்து மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க.முத்துவை இழந்து வாடும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு அன்புமணி இரங்கல் தெரிவித்தார்.
-
Jul 19, 2025 13:23 IST
மு.க.முத்து மறைவு – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மு.க.முத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “முத்தமிழறிஞர் கருணாநிதி – தமிழிசைப் பாடகர் சிதம்பரம் ஜெயராமன் சகோதரி பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனான மு.க.முத்து 77 வயதில் உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். இவரது மறைவால் துயரம் அடைந்திருக்கக் கூடிய தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.முத்துவின் துணைவியார் சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோருக்கும், மற்றும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இருந்தது.
-
Jul 19, 2025 13:22 IST
மு.க.முத்து மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல்
"கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். கலை உலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். மிகுந்த சோகமான இந்த நேரத்தில் முதலமைச்சருக்கும், குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Jul 19, 2025 13:21 IST
மு.க.முத்து மறைவு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்துவின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Jul 19, 2025 13:20 IST
மு.க.முத்து உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு.க.முத்து வயது மூப்பின் காரணமாக காலமானதையொட்டி, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
-
Jul 19, 2025 13:19 IST
மாணவர்களுடன் மௌன அஞ்சலி
மதுரையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற எம்.பி. கனிமொழி, தன் அண்ணன் மு.க.முத்து காலமான செய்தி தெரிந்தவுடன் மாணவர்களுடன் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து விரைவாக புறப்பட்டுச் சென்றார்
-
Jul 19, 2025 13:18 IST
"எம்.ஜி.ஆருக்காக வாக்கு சேகரித்ததை மறக்கவே முடியாது" - ஆர்.எஸ்.பாரதி
"நானும், மு.க.முத்துவும் எம்.ஜி.ஆருக்காக வாக்கு சேகரித்ததை மறக்கவே முடியாது..." என்று மறைந்த மு.க.முத்து குறித்தான நினைவுகளை பகிர்ந்த ஆர்.எஸ்.பாரதி.
-
Jul 19, 2025 13:17 IST
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மூத்த அண்ணன் - என் பாசத்திற்குரிய பெரியப்பா மு.க.முத்து அவர்கள் மறைவால் தாங்கொணா துயருற்றேன். நம் தலைவர் அவர்கள் மீதும் - என் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்த முத்து பெரியப்பாவின் மறைவு கலைஞர் குடும்பத்துக்கு பேரிழப்பு. மேடை நாடகங்களின் வழியே திராவிட இயக்கக்கொள்கைகளை கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். திரைப்பட நடிகராக - பாடகராக கலையுலகில் கால் பதித்து மக்ககளிடம் புகழ் பெற்றார். அவர் மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றும் எங்கள் மனங்களில் நிறைந்திருக்கும். முத்து பெரியப்பாவுக்கு என் அஞ்சலிகள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Jul 19, 2025 13:16 IST
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
-
Jul 19, 2025 13:15 IST
நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி இரங்கல்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான திரு மு.க.முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,திமுகவைச் சேர்ந்த சகோதர,சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி கூறியுள்ளார். .
-
Jul 19, 2025 13:10 IST
மு.க.முத்து மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா மு.க.முத்து அவர்களில் இறுகாப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயரமுற்றேன். தந்தையைப் போலத் திரைத் துறையில்தடம் பதித்தவர். அவரை பிரிந்து வாடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட உறவினர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது இணையதள பக்கத்தில் எழுதியுள்ளார்.
-
Jul 19, 2025 12:36 IST
வைரமுத்து அஞ்சலி
கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்
-
Jul 19, 2025 12:34 IST
வைகோ இரங்கல்
முத்தமிழறிஞர் கருணாநிதி – தமிழிசைப் பாடகர் சிதம்பரம் ஜெயராமன் சகோதரி பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனான மு.க.முத்து 77 வயதில் உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.
தான் பிறந்தபோதே அன்புத் தாயாரை பறிகொடுத்த துயரத்திற்கு உரியவர் மு.க.முத்து. கலைத்துறையில் நாட்டம் கொண்ட அவர் தொடக்க காலத்தில் தி.மு.கழக மேடைகளில் கழக கொள்கை விளக்கப் பாடல்களை பாடியும், தேர்தல் களத்தில் சிறப்பாக பிரச்சாரம் செய்தும் தி.மு.கழக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார்.
இவரது மறைவால் துயரம் அடைந்திருக்கக் கூடிய தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.முத்துவின் துணைவியார் சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோருக்கும், மற்றும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
வைகோ இரங்கல்
-
Jul 19, 2025 11:58 IST
செல்வப்பெருந்தகை இரங்கல்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான திரு மு.க.முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.…
— Selvaperunthagai K (@SPK_TNCC) July 19, 2025 -
Jul 19, 2025 11:57 IST
கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்துவின் உடல்
மு.க.முத்துவின் உடல் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது
-
Jul 19, 2025 11:56 IST
சொந்தக் குரலில் பாடல்கள்
தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார் முத்து. 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க' என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.
-
Jul 19, 2025 11:55 IST
முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்
இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் முத்து. நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார். பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு இரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து அவர்கள்.
-
Jul 19, 2025 11:24 IST
மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்!
வீடியோ: சன் நியூஸ்
#Watch | கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#SunNews | #CMMKStalin | #RIPMKMuthu | #MKMuthu pic.twitter.com/70fM3XWa9P
— Sun News (@sunnewstamil) July 19, 2025 -
Jul 19, 2025 11:20 IST
தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணன்: ஸ்டாலின் உருக்கம்
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) July 19, 2025
தந்தை முத்துவேலர்… pic.twitter.com/4pXuTAKjf1
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.