கறுப்பர் கூட்டம் என்ற யூடிப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு பாடல் இந்து மத நம்பிக்கையை புண் படுத்தும் விதமாக அமைந்ததாக பாஜக செயற்பாட்டாளர் ஆர்.சி பால்கனகராஜ் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 153, 153(A)(1)(a), 295(P), 505 (1)(b) and 505(2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மத்தியகுற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேகொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, சுரேந்திரன் நடராஜன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் செயற்பாட்டாளர் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நேற்று வேளச்சேரியில் கைது செய்தனர். கந்த சஷ்டி குறித்த அவதூறு வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கந்த சஷ்டி குறித்த விமர்சனத்துக்காக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை நீக்கிய பின்பு இந்த கைது நடவடிக்கை அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Karuppar koottam youtube channel kandha sasti kavasam controversy karuppar koottam members arrested
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!