கரூரில் லஞ்ச வழக்கில் கைதான பெண் அதிகாரி திடீர் மரணம்

மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும்,எந்த சிகிச்சையும் பலனளிக்காததால், ஜெயந்தி ராணியின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

By: Updated: March 19, 2020, 08:35:32 AM

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கே.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் ஜெயந்தி ராணி, வீட்டுமனை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜெயந்தி ராணியை கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜெயந்தி ராணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர்  அழைத்து சென்றுள்ளனர். அப்போது,நெஞ்சு வழியால் மயங்கியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும்,எந்த சிகிச்சையும் பலனளிக்காததால், ஜெயந்தி ராணியின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் கே.பரமத்தி ஊராட்சி மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Karur block development officer died due to cardiac arrest

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X